ஆளும் கட்சியின் விதிமுறை மீறல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! தேர்தல் ஆணையத்திற்கு ஜி.கே.வாசன் கோரிக்கை.! - Seithipunal
Seithipunal


தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் விதிமுறை மீறல்களை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு ஜி.கே. வாசன் கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் விடுத்துள்ள அறிக்கையில்,

மாநிலத்தின் பல பகுதிகளில் ஆளும் தி.மு.க வும் அதன் கூட்டணி கட்சிகளும் தேர்தல் ஆணைய கோட்பாடுகளை, விதிமுறைகளை மீறியே செயல்படுகிறது. இதற்கு காரணம் அதிகார பலம், பண பலம், ஆள்பலம். 

தேர்தல் முறையாக, சரியாக, நியாயமான முறையில் நடைபெற வேண்டும் என்பது ஜனநாயகத்தில் ஏற்புடையது.

ஆனால் ஆளும் தி.மு.க வினரும், கூட்டணி கட்சியினரும் பல இடங்களில் பணப்பட்டுவாடா செய்வதும், பரிசுப் பொருட்கள், கூப்பன் வழங்குவதும் வெட்ட வெளிச்சமாயிருக்கிறது.

இந்நிலையில் மாநில தேர்தல் ஆணையம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான விதிமுறைகளை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

குறிப்பாக தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்படும் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் மீது தேர்தல் ஆணைய விதிமுறைகள்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் ஆணைய கோட்பாடுகள் முறையாக கடைபிடிக்கப்பட வேண்டும் என்பது அனைவருக்கும் பொதுவானது.

மேலும் தேர்தல் ஆணையம் கண்காணிப்போடு செயல்பட்டு தேர்தல் நியாயமாக நடைபெறும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.

தேர்தலானது ஆட்சி அதிகாரத்துக்காக நடைபெறாமல் மக்கள் நலன் காப்பதற்காக நடைபெற வேண்டும்.

எனவே தேர்தல் ஆணையம், மாநிலம் முழுவதும் ஆளும் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சியினரின் அத்துமீறலை முடிவுக்கு கொண்டுவந்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GK Vasan Election Commission


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->