நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் கானா பாலா.. எந்த பகுதியில் தெரியுமா.? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள் 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ஆயிரத்து 374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3 ஆயிரத்து 843 நகராட்சி உறுப்பினர்கள், 7 ஆயிரத்து 621 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12 ஆயிரத்து 838 பதவிகளுக்கு வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் ஆகும். ஆகையால், அனைத்துக் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கலில் மும்முரம் காட்டி வருகின்றனர். இன்று மாலை 5 மணியுடன் வேட்புமனுத்தாக்கல் நிறைவடைகிறது. இதுவரை 37,518 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கானா பாலா போட்டியிடுகிறார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சி திருவிக நகர், ஆறாவது மண்டலம், 72 வது வார்டில் சுயேட்சையாக கானா பாலா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். 

ஏற்கனவே 2006 மற்றும் 2011ம் ஆண்டு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு இரண்டாவது இடம் பிடித்துள்ளார். தற்போது மூன்றாவது முறையாக அதே வார்டில் போட்டியிட கானாபாலா மனு தாக்கல் செய்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gana bala nomination for local body election


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->