ராமர் கோவில் கும்பாபிஷேகம்.. கருணாநிதி வீட்டுக்கு சென்ற முதல் அழைப்பு.!! - Seithipunal
Seithipunal


பாஜக கடந்த நாடாளுமன்ற பொது தேர்தலின் வாக்குறுதியில் அயோதியில் ராமர் கோவில் கட்டப்படும் என்ற பிரச்சாரத்துடன் தேர்தலை எதிர்கொண்டு தனி பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைத்தது அடுத்த ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வரும் ஜனவரி 22ஆம் தேதி அயோதியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான ராமர் கோயில் மற்றும் குழந்தை இராமர் சிலை திறந்து வைக்கப்பட உள்ளது. 

இந்த விழாவிற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதே போன்று பொதுமக்களுக்கும் அழைப்பு விடுக்க மத்திய பாஜக அரசு திட்டமிட்டு சம்பந்தப்பட்ட மாநில நிர்வாகிகளை முடுக்கி விட்டுள்ளது.

அந்த வகையில் தமிழகத்தில் ராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழ் கொடுக்கும் பணி இன்று முதல் துவங்கப்பட்டுள்ளது. இந்த விழாவுக்கான முதல் அழைப்பிதழ் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வீட்டிற்கு வைக்கப்பட்டுள்ளது. தமிழக பாஜக மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் கருணாநிதியின் இல்லத்திற்கு நேரடியாக சென்று அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழை வழங்கியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

First call to Karunanidhi house for Ram Temple Kumbabhishekam


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->