கூரை வீட்டை கொளுத்திய பாஜகவினர்..நாகை பாஜக வேட்பாளர் மீது வழக்கு.!! - Seithipunal
Seithipunal


நாகை நாடாளுமன்ற தொகுதி பாஜக சார்பில் போட்டியிடும்  எஸ். ஜி. எம் ரமேஷ் போட்டியிடுகிறார். இவரை வரவேற்பதற்காக நேற்று காடாம்பாடியில் உள்ள நகராட்சி அலுவலகம் எதிரே சாலையில் பாஜகவினர் பட்டாசு வைத்தனர்.

பட்டாசிலிருந்து தீப்பொறி பறந்து சாலை ஓரத்தில் உள்ள ஓய்வுபெற்ற அரசு பஸ் டிரைவர் பக்கிரி சாமி என்பவர் கூரை வீட்டில் விழுந்தது. அதில் ஏற்பட்ட தீ மலமலவென பரவி அவரது வீடு முழுழுவதுமாக எரிந்து நாசமானது. இது குறித்து பக்கிரி சாமி கொடுத்த புகாரின் பேரில் அப்பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதேபோல் கிராம நிர்வாக அலுவலர் வீரமணி கொடுத்த புகாரின் பெயரில் தேர்தல் நடத்த விடுமுறைகளை கூறியதாக நாகை பாஜக வேட்பாளர் ரமேஷ் மீதும் கட்சியை நிர்வாகிகள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தடை செய்யப்பட்ட சீன பட்டாசு விற்பனை செய்ததாக பட்டாசு கடை உரிமையாளர் தம்பிதுரை போலீசார் கைது செய்தனர். மேலும்  பூங்கா அருகே உள்ள அவரது பட்டாசு கடைக்கி வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fireworks case against Nagai bjp candidate


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->