மெட்ரோவில் சத்தம் போட்டால் அபராதம்...! - மெட்ரோ நிர்வாகம் கடும் எச்சரிக்கை...! - Seithipunal
Seithipunal


சென்னையின் நாளந்தோறும் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலுக்கு மிகப் பெரிய தீர்வாக விளங்குவது மெட்ரோ ரெயில் சேவையாகும். விமான நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம், எழும்பூர், சென்னையிலுள்ள சென்ட்ரல் போன்ற முக்கிய மையங்களை ஒரே கோட்டில் இணைத்து, நகரின் இதய துடிப்பாக செயல்பட்டு வருகிறது.

இதனால் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த சேவையை நம்பி பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.ஆனால், இந்த வசதியான பயணத்தில் சிலர் மேற்கொள்ளும் அசம்பாவித பழக்கங்கள், மற்ற பயணிகளின் அமைதியையும் நிம்மதியையும் குலைக்கும் வகையில் மாறி வருகின்றன.

குறிப்பாக, அலைபேசியில் உரத்த குரலில் பேசுதல், காதுக்கருவி இன்றி பாடல்கள் கேட்பது, வீடியோக்களை முழு ஒலியுடன் பார்ப்பது போன்ற செயல்கள் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.இந்த நிலையை கருத்தில் கொண்டு, மெட்ரோ நிர்வாகம் கடுமையான ஒழுங்கு விதிகளை அறிவித்துள்ளது.

அதன் படி, மெட்ரோ ரெயில்களிலும் நிலைய வளாகங்களிலும் சக பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் எந்த செயல்களும் அனுமதிக்கப்படாது என தெரிவிக்கப்படுகின்றது.

அலைபேசியில் சத்தமாக உரையாடுதல், காதுக்கருவி இல்லாமல் இசை அல்லது வீடியோ கேட்குதல், ஸ்பீக்கர் வசதியை பயன்படுத்துதல் போன்றவை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகளை மீறுபவர்களுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.மெட்ரோ பயணம் அனைவருக்கும் சௌகரியமான அனுபவமாக அமைய, ஒவ்வொரு பயணியும் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்பது நிர்வாகத்தின் வலியுறுத்தலாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Fine making noise metro Metro administration issues strict warning


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->