அனல் பறக்கும் தேர்தல் களம்.. "இன்று மாலைக்குள்" இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு.!! - Seithipunal
Seithipunal


  தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று வேட்பு மனு மீதான பரிசீலனை நிறைவு பெற்ற நிலையில் வேட்பாளர்களின் பட்டியல் இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 

மக்களவைப் பொதுத் தேர்தல் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள் என இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது. அதன்படி இன்று மாலைக்குள் மக்களவைப் பொதுத் தேர்தலில் போட்டியிட விருப்பமில்லாத வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை இன்று மாலைக்குள் திரும்ப பெற்றுக் கொள்ளலாம். 

வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை திரும்ப பெற்ற பிறகு தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கான இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Final loksabha election candidates list releasing today evening


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->