#JUSTIN : "பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின்.?" தேசிய எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவு பொதுக்குழு கூட்டத்தில் பேச்சு.!  - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் சினிமா பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவரது எழுபதாவது பிறந்த நாள் தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் ஒரு பொதுக்குழு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய அளவிலான எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கத்தில் திமுக சார்பில் இந்த பொதுக்கூட்டமானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் இதற்கான நிகழ்ச்சி ஒய் எம் சி ஏ மைதானத்தில் நடந்து வருகின்றது.  

இதில் தேசிய முக்கிய தலைவர்களாக பார்க்கப்படும் அகில இந்தியக் காங்கிஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ஜம்மு காஷ்மீரின் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இதில் கலந்துகொண்டு பேசிய ஜம்மு காஷ்மீரின் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, " ஜம்மு காஷ்மீரில் ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த வேண்டும் என்பதுதான் எங்களுடைய குரலாக இருக்கிறது. ஸ்டாலின் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பு செய்ய முயற்சிகள் மேற்கொள்வது மகிழ்ச்சி அடைய வைக்கிறது. ஸ்டாலின் ஏன் பிரதமர் வேட்பாளராக இருக்கக் கூடாது?" என்று பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Faroor Abdullah Speech about Pm Candidate as Stalin


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->