பரபரப்பு...! RSS மறைமுக திட்டம் இது...! - திருமாவளவன் தாக்கம் மிக்க பேச்சு!
Excitement This indirect RSS plan Thirumavalavans impressive speech
தமிழ்நாடு முழுவதும் இன்று தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் “வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (SIR)” திட்டத்திற்கு எதிராக வன்மையாகக் குரல் எழுப்பினர். சென்னை மிண்ட் பகுதியில் நடைபெற்ற முக்கிய ஆர்ப்பாட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தீவிரமான உரையாற்றினார்.

அவர் தெரிவித்ததாவது,"SIR குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை முதன்முறையாக நடத்தி விவாதித்தது தமிழ்நாடே! இது நமது ஜனநாயக விழிப்புணர்வுக்கான ஒரு முக்கியமான அடையாளம்".அவர் மேலும்,"வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது தேர்தல் ஆணையம் வழக்கமாக மேற்கொள்ளும் நடைமுறை.
ஆனால் ‘SIR’ அதற்கு முற்றிலும் மாறுபட்டது. இது சாதாரண பட்டியல் திருத்தம் அல்ல... குடியுரிமையைச் சோதனை செய்யும் மறைமுக முயற்சி.”மேலும், திருமாவளவன் கடுமையாக விமர்சித்து தெரிவித்ததாவது,"இது பா.ஜ.க. அரசின் திட்டம் அல்ல; இது RSS அமைப்பின் ஆழ்மூல திட்டம்.
ஒரே நேரத்தில் பல குறிக்கோள்களை அடையக்கூடிய திட்டமிடப்பட்ட நடவடிக்கை இது.”அவர் வலியுறுத்திஎதாவது,"நமது குடிமக்களின் அடிப்படை உரிமைகளில் தலையிடும் எந்த முயற்சியும் ஏற்றுக்கொள்ள முடியாது. SIR எனப்படும் இத்திட்டம் அதற்கான தெளிவான உதாரணம்".
இந்த உரையுடன் தி.மு.க. கூட்டணி கட்சியினரின் ஆர்ப்பாட்டம் முழு தீவிரத்துடன் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்த போராட்டம் அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனம் ஈர்த்துள்ளது.
English Summary
Excitement This indirect RSS plan Thirumavalavans impressive speech