மக்களின் தீர்ப்பு உருவாகும் நேரம்...! பீகார் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் காலை 11 மணிக்கே 31.38% வாக்குகள்!
Time for the people verdict Bihars second phase polling sees 31point38percentage voter turnout at 11 am
பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று உற்சாகமாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 243 தொகுதிகள் கொண்ட இத்தேர்தலில், கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவில் 121 தொகுதிகளில் 65.08% என்ற சாதனைமிக்க வாக்கு சதவீதம் பதிவானது.

இன்று நடைபெறும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில், மீதமுள்ள 122 தொகுதிகளில் வாக்காளர்கள் அதிக அளவில் பங்கேற்று வருகின்றனர். மாநிலம் முழுவதும் 3 கோடி 70 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். வாக்காளர்கள் சீராக வாக்களிக்க 45,399 வாக்குச்சாவடிகள் திறம்பட அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும் நடைபெற 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதிகாலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை தொடர உள்ளது.மக்கள் அதிகாலை முதலே வாக்குச்சாவடிகளுக்குச் சென்று தங்கள் ஜனநாயக உரிமையைச் செலுத்தி வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
இதனால் பல பகுதிகளில் வாக்குச்சாவடிகள் திருவிழா சூழலை ஒத்திருந்தன.தற்போதைய நிலவரப்படி, காலை 11 மணி வரை 31.38% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்குப்பதிவு மாலை வரை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Time for the people verdict Bihars second phase polling sees 31point38percentage voter turnout at 11 am