முன்னாள் பிரதமரின் மகனையே பாஜகவில் இணைத்து அதிரடி காட்டிய பாஜக!! - Seithipunal
Seithipunal


1990 முதல்1991 வரை இந்தியாவின் பிரதமராக பதவி வகித்த. சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கியவர் எஸ்.சந்திரசேகர், 7 மாதங்கள் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்த அவர் உடல் நலக்குறைவால் கடந்த 2007  ஆம்ஆண்டு தனது 80 வது வயதில் சந்திரசேகர் காலமானார்.

இதற்கிடையே, முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகனான நீரஜ் சேகர் அவரது தந்தையின் வழியிலேயே தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த நிலையில். சமாஜ்வாதி கட்சியின் சார்பில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக உள்ள  நீரஜ் சேகர் நேற்று அவரது எம்.பி.  பதவியை தீடீரென ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து, டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் சென்ற நீரஜ் சேகர் சமாஜ்வாதி கட்சியில் இருந்து தன்னை விடுவித்து கொண்டு இன்று  தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். பொது செயலாளர்கள் பூபேந்திர யாதவ் மற்றும் அனில் ஜெயின் ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்த அவர் தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டாவையும் சந்தித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ex prime minister son join in bjp


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->