மதிமுக உடைந்தது., சற்றுமுன் உதயமாகிய புதிய இயக்கம்.! அதிகாரபூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


குடும்ப அரசியலை எதிர்த்த வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திலும் அதே குடும்ப அரசியல் புகுந்துள்ளது. அதனை அவரே முன்மொழிந்து விட்டார். ஆம், மதிமுகவின் தலைமை செயலாளராக வைகோவின் மகன் துரை வையாபுரி நியமிக்கப்பட்டுள்ளதாக வைகோ.,வே அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்ததாவது, "துறை வையாபுரி நியமனத்தில் வாரிசு அரசியல் இல்லை. வாரிசு அரசியல் என்பது ஒருவரை திணிப்பது. தொண்டர்கள் விருப்பத்தின் பெயரில் அரசியலுக்கு துரை வையாபுரி வந்துள்ளார்" என்று வைகோ தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, இன்று வைகோவின் இந்த குடும்ப அரசியலை கண்டித்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து விலகுவதாக கோவையை சேர்ந்த மாநில இளைஞரணி செயலாளர் வே ஈஸ்வரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், ஈஸ்வரன் பிரபல செய்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்ததாவது, "காலம்தான் ஒரு தலைவரை உருவாக்கும். ஆனால் ஒரு தலைவரை ஏன் நீங்கள் திணிக்க நினைக்கிறீர்கள். துரை வையாபுரி தான் கட்சியை நடத்த முடியும். அவருக்கு தான் அந்த சக்தி இருக்கிறது. ஆற்றல் இருக்கிறது என்று நீங்கள் ஏன் சொல்கிறீர்கள்.

ஃபர்ஸ்ட் குவாலிட்டி இருக்கிறது என்கிறீர்கள்., இந்த இந்த இயக்கத்தில் உங்களால் (வைகோவால்) வளர்த்தெடுக்கப்பட்ட யாரும் இல்லையா? யாருக்குமே திறமை இல்லையா? அப்போது எதுக்காக இந்த திணிப்பு என்று நான் கேட்கிறேன்.

துரை வையாபுரி கட்சிக்கு வரட்டும், ஒரு பொறுப்பு வாங்கட்டும், அதற்கு நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், இவர் தான் அடுத்து கட்சியை வழிநடத்த முடியும் என்ற எண்ணம் ஏற்படுவது தவறானது. அதுவும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இப்படி ஒரு நிலைமையா என்பது தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை." என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோவுக்கும், தோழர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 

'எது நடக்கக்கூடாது என்று நினைத்தேனோ அது நடந்து விட்டது' என்று எதை வைத்து சொன்னாரோ., அது நடப்பதற்கு முன்பே அமைதியாக சென்று விட நினைத்து கடிதம் எழுதியபோது நான் கட்சியை விட்டு விலகவில்லை.

தற்போது கனத்த இதயத்தோடு கட்சியை விட்டு விலகிக் கொள்கிறேன். 'மறுமலர்ச்சி மக்கள் இயக்கம்' என்பதை தொடங்க உள்ளேன். இது அரசியல் இயக்கம் அல்ல" என்று அந்த அறிக்கையில் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eshwaran new party in tn


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal