மீண்டும் பொதுச்செயலாளர் பதவி ஏன்? எடப்பாடி பழனிசாமிக்கு நீதிபதி கிடுக்குப்புடி கேள்வி.! - Seithipunal
Seithipunal


அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்துள்ளது.

முதல் கட்டமாக ஓபிஎஸ் தரப்பு வாதமும், முன்னாள் பொதுக்குழு உறுப்பினரான வைரமுத்துவின் வாதமும் முன்வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டு வருகிறது. 

இதில், பொதுக்குழு கூட்டம் கட்சி விதிப்படி நடத்தப்பட்டதா? என விளக்க வேண்டும்.பெரியாரை மட்டுமே தலைவராக ஏற்று கொள்வதாக கூறியே பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது. பின்னர், நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான் எனக் கூறிவிட்டு, அந்த பதவியை கலைத்துவிட்டு மீண்டும் உருவாக்கியது ஏன்? என்று அடுத்தது நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதற்க்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில், "2016ல் சசிகலா சிறைக்கு சென்ற பின் பொதுக்குழு உறுப்பினர்கள் கோரிக்கையை ஏற்று பொதுக்குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

கட்சி விதிகளில் திருத்தம் செய்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பொதுச்செயலாளர் பதவியை கலைத்து, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்ட போதும், தேர்வு நடைமுறைகளில் எந்த மாற்றமும் செய்யவில்லை" என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு பதில் அளித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eps side say about admk general head post


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->