பாஜக எம்எல்ஏக்கள் அதிமுகவில் ஐக்கியமா? உடைத்து பேசிய எடப்பாடி.!! - Seithipunal
Seithipunal


கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கோவை வடக்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் பாஜகவின் இரண்டு சிட்டிங் எம்எல்ஏக்கள் இன்று பிற்பகல் 2:15 மணி அளவில் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைய போவதாக தெரிவித்திருந்தார். 

அம்மன் அர்ஜுனனின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பிய நிலையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதில் அளித்த அவர் நாங்கள் பாஜகவை போன்று யாரையும் தொலைபேசி பிடிப்பதில்லை நேற்று கூட பாஜக தலைவர் வியாபாரி போல கடை விரித்தார். அது போனியாகாத கடை அதிமுகவை பொறுத்தவரை மக்களுக்கு தொண்டாற்றும் இயக்கம். 

எனவே எல்லாருமே எங்களை நோக்கி வருவார்கள் நானும் உங்களை போல தான் செய்தி பார்த்தேன் பொறுத்திருந்து பாருங்கள்" என பதில் அளித்தார். அதேபோன்று சேலத்தில் உள்ள நெடுஞ்சாலை நகரை இல்லத்தில் கட்சி நிர்வாகிகளை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமியிடம் பாஜக எம்எல்ஏக்கள் இணைவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி "நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது. வந்தால் சந்தோஷம்" என பதிலளித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS response on bjp mla joining in AIADMK


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->