வருவாங்களா.. மாட்டாங்களா.. முடிவு என்ன? நிலைபாட்டை கேட்கும் ஈபிஎஸ்.!! - Seithipunal
Seithipunal


மக்களவை பொதுத் தேர்தல் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெறப் போகும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக தொகுதி பங்கிட்டு குழு நிர்வாகிகளுடன் இந்த ஆலோசனையானது நடைபெற்று வருகிறது.

முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், கே.பி முனுசாமி, தங்கமணி, வேலுமணி, சி.வி சண்முகம், பெஞ்சமின் உள்ளிட்டோருடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அதிமுக தலைமை ஏற்று கூட்டணி அமைக்க சம்மதம் தெரிவித்துள்ள கட்சிகளுடன் அதிமுக தொகுதி பங்கிட்டு குழு பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் இந்த ஆலோசனை ஆனது நடைபெறுகிறது. 

ஏற்கனவே முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ள தேமுதிகவுடன் நேற்று இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்று முடிந்த நிலையில் புரட்சி பாரதம் மற்றும் புதிய தமிழகம் கட்சிகளுக்கு இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இத்தகைய அரசியல் சூழலில் தொகுதி பங்கேட்டில் கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து எடப்பாடி பழனிச்சாமியிடம் அதிமுக தொகுதி பங்கீடு குழு நிர்வாகிகள் விளக்கமளிக்க உள்ளனர். அதே போன்று ஒருசில கட்சிகளிடம் நடத்தப்பட்ட மறைமுக பேச்சுவார்த்தை குறித்தும் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS disscus with aiadmk seat share committee


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->