தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்.! அதிகாரபூர்வமாக அனுமதி தந்த மத்திய அரசு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 11 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு அனுமதி அளித்ததற்கு மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தனை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சந்தித்து நன்றி கூறினார். இதற்கான பணிகள் உடனடியாக துவங்கப்பட உள்ளதாக, தெரிவித்துள்ளார்.

நேற்று டெல்லி சென்ற தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனை நேரில் சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு அனுமதி அளித்ததற்கு நன்றி தெரிவித்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தொடர் முயற்சியின் காரணமாக ஒரே ஆண்டில், தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகா், திண்டுக்கல், நாமக்கல், திருப்பூா், நீலகிரி, திருவள்ளூா், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், அரியலூா், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களுக்கு புதிய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு ஒப்புதல் ஆணை  பெறப்பட்டிருப்பதாக கூறினார். 

மேலும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு துரிதமாக செயல்பட்டு வருவதற்கு மத்திய அமைச்சர் பாராட்டு தெரிவித்தாக கூறியனார். 

புதிதாக கட்டப்பட உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு மத்திய அரசு 60 சதவீதமும்
மாநில அரசு சார்பாக 40 சதவீதமும் நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eleven new medical college approved by central government


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->