பெண்களை கவரும் சின்னம்..? நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் தீவிர ஆலோசனை! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள், தொண்டர்கள் என பலரும் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். மேலும் தொண்டர்கள் கட்சியின் பெயரை தெரிவித்து வீடு வீடாக சென்று இனிப்பு வழங்கி அறிமுகம் செய்து ஆதரவு திரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

அடுத்த கட்டமாக விஜய், கட்சியில் கொடியை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். கொடியின் நிறம் கொள்கை விளக்கம் வகையில் உருவாக்கப்படுகிறது. 

இந்நிலையில் கட்சியின் சின்னம் குறித்து கட்சியின் தலைவர் விஜய், அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார். 

மேலும் கட்சியின் சின்னமானது பெண்களை கவரும் விதமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. 

ஏற்கனவே தேர்தல் கமிஷனுக்கு ஐந்து சின்னம் கொடுக்கப்பட்ட நிலையில் அடுத்த கட்டமாக பெண்களை கவரும் வகையில் கட்சியின் சின்னம் தேர்வு செய்யப்பட்டு விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

election symbol actor Vijay party issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->