திமுகவினர் புகார்; ஆர்.பி.உதயகுமார் இல்லத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை; பொருட்கள் எதுவும் சிக்கவில்லை..? - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் மொத்தமுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும், தேர்தல் பறக்கும் படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்த கண்காணிப்பில் ஆவணங்கள் இன்றி ரூ. 50,000க்கு மேல் எடுத்துச் செல்லப்படும் பணம், நகை, பரிசுப் பொருட்கள் போன்றவை பறிமுதல் செய்யப்படுகிறது.

அத்துடன், அரசியல் கட்சியினர் எங்கேனும் பரிசுப் பொருட்களை வைத்திருப்பதாக தகவல் வந்தாலும், அந்த இடத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டு அதனை பறிமுதல் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், மதுரை, டீ.குன்னத்தூரில் ஜெயலலிதா கோயில் வளாகத்தில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார், கட்சியினரை அழைத்து அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாகவும், பணப் பட்டுவாடா செய்ததாகவும், வாக்காளர்களுக்கு கொடுக்க பரிசுப் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாகவும் திமுகவினர் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், ஜெயலலிதா கோயில் வளாகத்தில் உள்ள ஆர்.பி.உதயகுமார் இல்லத்தில் சோதனை செய்தனர். இந்த சோதனையில் பொருட்கள் ஏதும் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Election Flying Squad Raids R.B. Udhayakumar's Residence


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->