உள்ளாட்சி தேர்தல்: அதிரடியாக தடை விதித்த தேர்தல் ஆணையம்!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் கடைசியாக கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்றது அப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி துறைக்கான பிரதிநிதிகளின் பதவிக் காலம் 2016 அக்டோபர் 24ஆம் தேதி முடிவடைந்தது. 

இதையடுத்து, இதுவரை உள்ளாட்சி தேர்தல் நடைபெற வில்லை இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இதையயடுத்து, தமிழகத்தில் விரைவாக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் தமிழக தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. 

இன்று தமிழக தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேதியை அறிவித்தது. அதன் படி,

முதல் கட்ட தேர்தல்: டிசம்பர் 27

முதல் கட்ட தேர்தல்: டிசம்பர் 30

வேட்பு மனு தாக்கல் தொடங்கும் நாள்: டிசம்பர் 6

வேட்பு மனு தாக்கல் கடைசி நாள்: டிசம்பர் 13

திரும்ப பெற கடைசி நாள்: டிசம்பர் 18

தேர்தல் முடிவு: ஜனவரி 2, 2020 

உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கப்பட்டு, அன்றே உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மாநில தேர்தல் ஆணையம், உள்ளாட்சித் தேர்தலையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்க தடை விதித்துள்ளது. மேலும் புதிய திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகளை வெளியிடக்கூடாது என்றும் எம்எல்ஏக்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

election commission new announcement


கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
Seithipunal