தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! நிம்மதியடைந்த நெட்டிசன்கள்!!  - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 14ம் தேதி துவங்கி மே 19 வரை 7 கட்டங்கள் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலுக்கான தேதி மார்ச் 10-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. தேர்தல்  விதிமுறைகளும் அன்றிலிருந்தே அமலுக்கு வந்தது. அதன்படி, அரசு எந்த நலத்திட்டங்களையும் அறிவிக்கக்கூடாது. ஊழியர்களை பணி இடமாற்றம் செய்யக் கூடாது. அரசு விழாக்கள் நடைபெற கூடாது. உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டது. 

மேலும், சமூக வலைதளங்களில் பலவற்றிற்கும் கட்டுப்பாடுகள் வழங்கப்பட்டது. இதன்காரணமாக பலர் தங்களது முகநூல் மற்றும் ட்வீட்டர் போன்ற கணக்குகளை இழக்க நேரிட்டதை அறிவோம். பலரது ஐடிக்கள் நிரந்தரமாகவே முடக்கப்பட்டது. இந்நிலையில், மே 27ஆம் தேதி இந்த தேர்தல் விதிமுறைகள் முடிவடைவதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இதன் காரணமாக இணையப்பயனாளர்கள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர். 

இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இந்தியா முழுவதும் நடந்த பாராளுமன்ற தேர்தல், ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் மற்றும் சில இடங்களில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகியவற்றுக்கான முடிவுகள் வரப்பெற்றுவிட்டன. அதனைத் தொடர்ந்து, இந்தியா முழுவதும் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதி முறைகள் உடனடியாக நிறுத்தப்படுகின்றன. உடனடியாக இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது." என கூறப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

election commission new announcement


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->