முதல்வரின் எண்ணம் ஈடேறாது... எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்.!
Edappadi Palaniswami speech
காஞ்சிபுரம் தொகுதி அ.தி.மு.க வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி என்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியிருப்பதாவது,
அ.தி.மு.க இரண்டாக மூன்றாக சிதறும் என முதலமைச்சர் ஸ்டாலின் நினைத்துள்ளார். ஆனால் அவரது எண்ணம் ஈடேறாது. தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து விட்டது.

மேலும் மின் கட்டணம், சொத்து வரி, குடிநீர் வரி போன்றவை உயர்த்தப்பட்டுள்ளது. கைத்தறி நெசவாளர்களின் கோரிக்கைகளை பற்றி பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் இடம் பெறவில்லை.
மக்களுக்கு சேவை செய்வதில் அ.தி.மு.க முன்னிலையில் உள்ளது. இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகம் திகழ அ.தி.மு.க ஆட்சியில் போடப்பட்ட திட்டங்கள் தான் முக்கிய காரணமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
English Summary
Edappadi Palaniswami speech