பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறப்போகும் அதிமுக கூட்டணி.. வெளியான தகவல்.!! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடரின் இறுதி நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. சட்டமன்றக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ளாத சூழ்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி ஒரு மாதம், மூன்று மாதம் அல்லது ஆறு மாதம்தான் இருக்கும் என்று அவதூறான உண்மைக்கு புறம்பான பிரச்சாரங்களை எதிர்க்கட்சி உறுப்பினர்கள், குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் செய்து வந்தார். 

அதையெல்லாம் முறியடித்து 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைத்து எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய தலைவர்கள் கண்ட கனவை என் தலைமையிலான அரசு வெற்றிகரமாக நிறைவேற்றி, நாட்டு மக்களுக்கு நற்பணிகளை செய்து வருகிறது. நான் பதவி ஏற்றதில் இருந்து இன்றுவரை நாட்டு மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை வழங்கியதன் மூலம் தமிழகம் 'வெற்றிநடை போடும் தமிழகம்' என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது. எதிர்க்கட்சியினர் கூட மூக்கில் மேல் விரல் வைத்து பாராட்டும் அரசாக உள்ளது. 

 

இந்த ஆட்சிக்கு உறுதுணையாக விளங்கிய துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்திற்கும், முழு ஒத்துழைப்பு தந்து அமைச்சர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு பின்னாலும் அதிமுக 100 ஆண்டு காலம் ஆளும் என்று சட்டமன்றத்தில் ஜெயலலிதா சூளுரைத்தார். அதற்கேற்ப இந்த சோதனையான நேரத்தில் சிறந்த ஆட்சி நிர்வாகம், அதற்கு உறுதுணையாக விளங்கி அதிமுக எம்எல்ஏக்கள், நடுநிலையாக இருந்து திறம்பட செயல்பட்டு வரும் சபாநாயகருக்கு நன்றி.

எம்ஜிஆர், ஜெயலலிதா கண்ட கனவை நனவாக்கும் விதமாக வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஜெயலலிதாவின் அரசை அமைப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். எங்களுடைய கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளும் அனைத்து இடங்களில் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

edappadi palanisamy speech in assembly


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->