எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்  -நாஞ்சில் சம்பத்.! - Seithipunal
Seithipunal


எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 15 சுற்றுகள் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,556 வாக்குகள் பெற்றுள்ளார். இதில், அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,981 வாக்குகள் பெற்றுள்ளார்.

இதன் மூலம் 66,397 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அமோகவெற்றி பெற்றுள்ளார். இதனையடுத்து ஓபிஎஸ் ஆதவாளர்கள் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து வருகின்றனர்.

அதிமுகவின் இரட்டை தலைமை விவகாரத்துக்கு பின் சந்தித்த முதல் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு இது ஒரு பெரும் அடியாக விழுந்துள்ளது.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து கருத்து தெரிவித்த நாஞ்சில் சம்பத் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பதவியையும் ராஜினாமா செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Edappadi palanisamy resign opposite party leader post Nanjil sambath


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->