#Breaking: நிவர் புயல் பாதிப்புகள்; இழப்பீடு மற்றும் பயிர்காப்பீடு அறிவித்த எடப்பாடி.!  - Seithipunal
Seithipunal


வங்க கடலில் உருவான நிவர் புயல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக கடலூர், விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தது. மேலும் விளைநிலங்கள் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கிய நாசமானது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் கூடும் பாதிக்கப்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 

நேற்றிரவு கரையை கடந்த நிவர் புயல் திருவண்ணாமலை அருகே மையம் கொண்டு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. புயல் கரையை கடந்தாலும் முற்றிலுமாக ஓயவில்லை. மேலும், தீவிர புயலாக இருந்த நிவர் புயல், புயலாக வலுவிழந்தது. 

இந்த நிலையில், நிவர் புயலால் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு ரூ.10 இலட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், நிவர் புயலால் ஏற்பட்டுள்ள பயிர் சேதத்தை முறையாக கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

edappadi palanisamy fund announcement for nivar cyclone attack


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->