ஆட்டம் ஆரம்பம்.. ரூ.130.60 கோடி சொத்துக்களை முடக்கிய ED.!! வசமாக சிக்கிய ‌3 புள்ளிகள்.!! - Seithipunal
Seithipunal


தமிழக முழுவதும் உள்ள ஆறுகளில் இருந்து மணல் அள்ள வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு. சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களின் மேற்பார்வையில் மணல் குவாரிகள் அமைத்து மணல் அள்ளப்பட்டு வந்தது. 

அவ்வாறு மாவட்ட ஆட்சியரின் மேற்பார்வையில் அமைக்கப்பட்ட மணல் குவாரிகளில் முறைகேடாக மணல் கடத்தப்படுவதாக அமலாக்கத் துறைக்கு தொடர்ந்து புகார்கள் குவிந்தன.

அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். குறிப்பாக மணல் குவாரி தொழிலதிபர்கள் சண்முக சந்திரன், கருப்பையா ரத்தினம், பன்னீர்செல்வம் கரிகாலன் உள்ளிட்டோருக்கு சொந்தமான வீடு அலுவலகம் என அவர்கள் தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்த நிலையில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனையின் அடிப்படையில் சுமார் 130.60 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்கள் உட்பட 209 மணல் அள்ளும் பொக்லைன் இயந்திரங்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. மேலும் அமலாக்கத்துறை சோதனையின் போது மணல் குவாரி அதிபர்கள் ராமச்சந்திரன், ரத்தினம், கரிகாலன் மற்றும் அவர்கள் தொடர்புடையவர்களுக்கு சொந்தமான 35 வங்கி கணக்குகளில் இருந்து ரூ. 2.25 கோடி அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

மணல் குவாரி தொழிலதிபர்கள் ராமச்சந்திரன், ரத்தினம், கரிகாலன் ஆகிய மூன்று தொழிலதிபர்களும் திமுக மூத்த அமைச்சர் ஒருவருக்கு ‌நெருக்கமானவர்கள் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்ற பொது தேர்தல் நெருங்கி வரும் இந்த சூழலில் மணல் குவாரி அதிபர்களின் அசையும் சொத்துக்கள் முடக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ED provisionally attached rs131cr assets in illicit sand mining


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->