தேர்தல் முடிந்ததும் கட்சியில் இருந்து நீக்கிவிடுவேன்.. துரைமுருகன் எச்சரிக்கை.!! - Seithipunal
Seithipunal


திமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு இழுபறி நீடித்து வரும் நிலையில் இதற்கு காரணம் திமுக பெரும்பாலான மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என கட்சி தொண்டர்களும் நிர்வாகிகளும் திமுக தலைமையை வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. 

திமுக தலைமையிலான கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் கொங்கு மக்கள் தேசிய கட்சியுடன் தொகுதி பங்கீடு மட்டுமே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்படும் என மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அது எந்தெந்த தொகுதிகள் என இறுதி செய்யப்படவில்லை. அதேபோன்று திமுக கூட்டணியில் பிரதான கட்சிகளான விசிக, மதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் தொகுதி நான்காம் கட்ட பேச்சு வார்த்தை வரை தொடர்கிறது.

இதனால் திமுக தலைமையிலான கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம் பெறும் கூட்டம் இருந்து எந்த கட்சிகள் விலகும் என்ற பரபரப்பு நீடித்து வருகிறது.

இத்தகைய அரசியல் சூழலில் மக்களவைத் தேர்தலில் சரிவர பணியாற்றாத நிர்வாகிகளை தேர்தல் முடிந்த பிறகு கட்சியிலிருந்து நீக்கிவிடுவேன் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் எச்சரித்துள்ளார். 

கூட்டணி கட்சிகள் போட்டியிட்டால் திமுக நிர்வாகிகள் ஒத்துழைப்பு வழங்க மாட்டார்கள் என திமுக தலைமைக்கு சென்ற தகவலின் அடிப்படையில் இந்த எச்சரிக்கையானது விடுக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Duraimurugan warning DMK cadres not working remove from party


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->