மோடிக்கு திடீர் பாராட்டு.. கூட்டணி இன்னும் முடிவாகல.. திமுக எடுக்கும் ‌U-turn.? பதறும் "இண்டி" கூட்டணி.!! - Seithipunal
Seithipunal


திமுக மா பொதுச் செயலாளர் நீர்வளத் துறை அமைச்சர் ஆன துரைமுருகனை வேலூர் மாவட்டம் காட்பாடியில் பொங்கல் விழாவை முன்னிட்டு தொண்டர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர் அனைவருக்கும் வேட்டி மற்றும் துண்டுகளை பரிசாக வழங்கிய நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகனுடன் அவருடைய மகன் கதிர் ஆனந்த் சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார், கார்த்திகேயன், துணை மேயர் சுனில் குமார் உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகனிடம் காவிரி விவகாரம் குறித்து முன்னாள் பிரதமர் தேவகவுடா பேசியது குறித்து கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் "தேவகோட்டை பிரதமர் ஆவதற்கு முன்பும் சரி, பிரதமராக இருந்த போதும் சரி தற்போது வரை தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட காவேரியில் இருந்து தரக்கூடாது என்பதை வைராக்கியமாக வைத்துள்ளார்.

அவரிடத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு சாதகமாக ஒரு வார்த்தை கூட வராது தேவகவுடா ட்ரிப்யூனல் கெஜெட்டில் போடுவதை எதிர்த்தார். காவிரி பிரச்சனையை நரேந்திர மோடியால் மட்டுமே தீர்க்க முடியும் என திடீரென பிரதமரை புகழ்ந்து பேசிய துரைமுருகன் இடம் அண்ணாமலை திமுகவினரின் ஊழல் பட்டியல் வெளியிடுவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அண்ணாமலை அடுத்து ஊழல் பட்டியலை வெளியிடட்டுமே.!

நாங்க என்ன அவர் கைய பிடிச்சிட்டு இருக்கோம்? திமுக நாளைக்கு தேர்தல் வந்தாலும் சந்திக்கும் இது கொள்கைக்காக உருவாக்கப்பட்ட இயக்கம். பேஸ்மெண்ட் ரொம்ப ஸ்ட்ராங். திமுக தலைமையில் கூட்டணி அமைப்பது குறித்து தேர்தல் நேரத்தில் அறிவிப்போம். இப்போதைக்கு கூட்டணி பற்றி சொல்ல முடியாது இப்போது இருப்பவர்கள் எங்களுடன் இருப்பவர்கள் என நம்புகிறோம் என பதில் அளித்துள்ளார்.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் இத்தகைய பதில் இந்தியா கூட்டணியில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது ஏற்கனவே இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள மம்தா பானர்ஜி, நிதிஷ்குமார், அகிலேஷ் யாதவ், உத்தவ் தாக்கரே ஆகியோர் இந்தியா கூட்டணி தொகுதி பங்கீட்டில் முரண்பட்டு நிற்கும் சூழலில் தற்போது திமுகவும் இத்தகைய பதிலை அளித்திருப்பது இந்தியா கூட்டணியின் உறுதித் தன்மையை பலவீனப்படுத்துவம் வகையில் அமைவதால் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Duraimurugan said DMK alliance will be confirm near election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->