எங்களுக்கும் அக்கறை இருக்கு.. ஒரு‌ செங்கல் கூட நட முடியாது.. ஈ.பி.எஸ்.,க்கு‌ துரைமுருகன் பதில்.!! - Seithipunal
Seithipunal


கர்நாடக அரசு மேகதாது காவிரியில் அணை கட்ட முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு முதற்கட்ட பணிகளை தொடங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகின. அதன் அடிப்படையில் தற்போது நடைபெற்று வரும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கர்நாடகா அரசுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கவனயீர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதில் அளித்த தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் "காவிரி மேலாண் ஆணைய கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்க கூடாது என கூறியுள்ளோம். மேகதாதுவில் அணை கட்டுவதை ஒருபோதும் திமுக அரசு அனுமதிக்காது. தமிழ்நாட்டில் அனுமதி இல்லாமல் ஒரு செங்கலை கூட கர்நாடகாவால் எடுத்து வைக்க முடியாது.

பேச்சுவார்த்தை நடத்துவது இனிமேல் தீர்வாகாது; ஆணையம் மூலம் மட்டுமே தீர்வு ஏற்பட வேண்டும். தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரும் மேகதாது அணை கட்ட இசைவு தெரிவிக்க மாட்டார்கள். உங்களுக்கு எந்த அளவுக்கு அக்கறை உள்ளதோ அதே அளவுக்கு எங்களுக்கும் அக்கறை உள்ளது" என எடப்பாடி பழனிச்சாமியின் கவனியுங்கள் தீர்மானத்திற்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Duraimurugan response to EPS attention seeking resolution


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->