சாதி பாகுபாடு குறித்து பேசிய ஆளுநருக்கு துரைமுருகன் பதிலடி! - Seithipunal
Seithipunal


கடந்த அக்டோபர் 4ம் தேதி கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் நடைபெற்ற நந்தனார் குருபூஜை விழாவில் பங்கேற்ற  தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாட்டில் சமீபகாலமாக நடைபெறும் நிகழ்வுகளை கேட்கும்போது என் மனம் வேதனை அடைகிறது. சாதியால் மட்டும் அல்லாமல் பொருளாதாரத்தாலும், அரசியலாலும் பாகுபாடுகள் ஏற்படுகிறது. இந்த சமுதாயத்தில் ஆலய பிரவேசிக்க தடை என்பது இந்து மதத்திலோ, சனாதன தர்மத்திலோ இல்லை.

வேங்கைவயலில் தாழ்த்தப்பட்ட மக்கள் குடிக்கும் குடிநீரில் மலத்தை கலக்கிறார்கள். நாங்குநேரியில் 12 ஆம் வகுப்பு மாணவனை ஆசிரியர்கள் பாராட்டியதால் மாற்று சமுதாய மாணவர்கள் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பஞ்சாயத்து தலைவராக வெற்றி பெற்ற பெண் பட்டியல் இனத்தவர் என்பதால் பதவி ஏற்க முடியவில்லை. சாதிய கொடுமைகள் தமிழ்நாட்டில் அதிகரித்து காணப்படுகிறது என தமிழக ஆளுநர் ரவி வேதனையுடன் தெரிவித்து இருந்தார்.

இதற்கு நீர்வளத் துறை அமைச்சரும் திமுக பொதுச்செயலாளமான துரைமுருகன் எதிர்வினை ஆட்சி உள்ளார். இதுகுறித்து பேசிய அவர் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை படிக்காமல், பாஜக, ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் போல் பரப்புரை செய்வதா? தமிழ்நாட்டின் சமூகநீதியால் பிறந்துள்ள அமைதிக்கு குந்தகம் விளைவித்து வருவது ஆளுநருக்கு அழகல்ல.

அரசியல் பேச வேண்டும் என்றால், அரசியல் தலைவராக மாறி தாராளமாக ஆளுநர் தன் கருத்தை தெரிவிக்கட்டும். அதற்கு பதிலடி கொடுக்க நாங்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களுமே தயாராக இருக்கிறார்கள்" என காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Duraimurugan responds to GovernorRavi talked about caste discrimination!


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->