#BREAKING: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.! உடன்பிறப்புகளுக்கு அழைப்பு.!  - Seithipunal
Seithipunal


திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி திமுக மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வருகின்ற டிசம்பர் ஒன்றாம் தேதி வியாழக்கிழமை காலை 10:30 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட கழக செயலாளர் கூட்டம் நடைபெற இருக்கிறது. 

இந்த மாவட்ட கழக செயலாளர் கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சமீபத்தில் உட்கட்சி தேர்தல் முடிந்து திமுகவில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

duraimurugan invite dmk district secretary for meeting


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->