சட்டப்பேரவை: துரைமுருகன் எழுப்பிய கேள்வி! ஆக., அமைச்சர் அதிரடி பதில்! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவையின் 3 நாள் கூட்டத்தொடர் நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியுள்ளது. இந்த சட்டப்பேரவை கூட்டத் தொடருக்கு, போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். பாதுகாப்பு கருதி முதலமைச்சர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள் என அனைவரும் செல்வதற்கு தனித்தனியாக வாயில்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

நேற்று பேரவை கூட்டம் தொடங்கியதும் குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, எம்எல்ஏ ஜெ அன்பழகன், எம்பி வசந்தகுமார் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. மேலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அவர்களுக்கும் இந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை, சட்டப் பேரவைத் தலைவர் தனபால் நாளைக்கு ஒத்தி வைத்தார்.

இந்நிலையில், மூன்று நாள் சட்டப்பேரவைக் கூட்டத்தில் இன்று காலை இரண்டாவது நாள் கூட்டம் தொடங்கியுள்ளது. இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நீட் தேர்வு உள்ளிட்ட முக்கிய விவரங்களை எதிர்க்கட்சிகள் எழுப்ப உள்ளன. இதற்கிடையே வெளியான தகவலின்படி, இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஆறு மசோதா தாக்கல் உள்ளதாகவும். அதில், முக்கியமான கொரோனா விவகாரம் குறித்து ஒரு மசோதா தாக்கல் பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், சட்டப்பேரவையில் துரைமுருகன், சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டும் இடைவெளிவிட்டு அமரலாம், ஆனால் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் மாணவர்கள் நெருக்கமாக அமரலாமா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி இன்னும் பள்ளிகள் செயல்படவில்லையே என்று பதிலளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

duraimurugan assembly speech


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->