டாக்டர் இராமதாஸ் வைத்த கோரிக்கை., ஆளுநர் மாளிகைக்கு சென்ற அதிகாரிகள்.! வெளியானது அந்த அறிவிப்பு.!  - Seithipunal
Seithipunal


முனைவர் பட்டதாரிகளுக்கு நேரடியாக பட்டச் சான்று வழங்கப்படும் என்று அறிவித்துள்ள தமிழக  அரசுக்கு பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். 

இத்துக்குறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் வரும் 6-ஆம் தேதி நடைபெறவிருக்கும் பட்டமளிப்பு  விழாவில் 600 முனைவர்களுக்கு  நேரடியாக ஆளுனர் கரங்களால் பட்டம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலை மாற்றம் வரவேற்கத்தக்கது!

முனைவர் பட்டதாரிகளுக்கு நேரடியாக  பட்டச்சான்றிதழ் வழங்கப்படாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.  அது சரியல்ல.... முனைவர் பட்டதாரிகளுக்கு நேரடியாக சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என நேற்று வலியுறுத்தியிருந்தேன். அது இன்று ஏற்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது!

தமிழ்நாடு ஆளுனர் மாளிகையுடன் தமிழக அரசின் உயர்கல்வித் துறை  நேரடியாக பேசி  இதை சாத்தியமாக்கியிருப்பதாக அறிகிறேன். தமிழக அரசின் இந்த முயற்சிக்கு பாராட்டுகள். பட்டமளிப்பு விழாவில்  இதே மரபு இனிவரும் காலங்களிலும் தொடர வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். 

மருத்துவர் இராமதாஸ் நேற்று வெளியிட்ட அந்த அறிக்கை :

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Say About TNGovr Announce Dec


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->