பொங்கல் விடுமுறை! அனைவரின் குரலாகவும் வலியுறுத்திய டாக்டர் ராமதாஸ்! இன்று வெளியாகும் அறிவிப்பு!   - Seithipunal
Seithipunal


இந்த வருடம் தைப்பொங்கல் பண்டிகையானது போகி பண்டிகை முதல் காணும் பொங்கல் வரை ஜனவரி 14-ஆம் தேதி செவ்வாய்க் கிழமையில் இருந்து ஜனவரி 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் திங்கள்கிழமை விடுமுறை அளித்து  ஒரு வார காலத்திற்கு பொங்கல் விடுமுறை அளிக்கப்படுமா? என்பது குறித்து நாளை ( இன்று ) முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து அறிவிக்க இருப்பதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

திங்கள்கிழமை உள்ளூர் விடுமுறையாக அறிவித்து அடுத்த நான்கு நாட்களும் பொங்கல் விடுமுறையோடு, அதற்கடுத்த இரண்டு நாட்கள் சனி ஞாயிறு என்பதால் தொடர்ச்சியாக 8 நாட்கள் விடுமுறை வரும் என பள்ளி கல்லூரிகளில் உள்ள அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். 

இந்த நிலையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டரில், "தமிழ்நாட்டில் 14-ஆம் தேதி போகிப்பண்டிகை வரை பள்ளிகள், கல்லூரிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவியர் பொங்கல் திருநாளைக் கொண்டாட சொந்த ஊருக்கு செல்வதில் சிக்கல் ஏற்படும்!

பொங்கல் திருநாள் கொண்டாட்டம் என்பது போகிப்பண்டிகையுடன் தொடங்குகிறது. எனவே போகியை கொண்டாடவும், விடுதி மாணவர்கள் பொங்கலுக்கு சொந்த ஊர் செல்ல வசதியாகவும் 14-ஆம் தேதியும் விடுமுறை வழங்க பள்ளிக் கல்வித்துறைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்!" என வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dr ramadoss requests leave for pongal festival


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->