தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் - மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


ஆங்கிலப் புத்தாண்டு அனைவருக்கும் அனைத்து நலன்களையும் வழங்கட்டும் என்று, முன்னாள் மத்திய அமைச்சரும், பாமக இளைஞரணி தலைவருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எம்பி., தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரின் வாழ்த்துச் செய்தியில், "விடியலை வரவேற்பது போல ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை நம்பிக்கையுடனும் கொண்டாடும் தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும்  இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

புத்தாண்டு பிறப்பு என்பது ஆண்டுக்கு ஒரு முறை வழக்கமாக வந்து போகும் நிகழ்வல்ல. ஒவ்வொரு ஆண்டும் மனிதகுலத்தின் மனதில் புத்துணர்வையும், புது நம்பிக்கையையும் விதைப்பதற்கான உன்னத திருநாள் ஆங்கிலப் புத்தாண்டு ஆகும். ஓராண்டில் ஆயிரமாயிரம் ஏமாற்றங்கள், வருத்தங்கள், கவலைகள் இருந்தாலும், அவை அனைத்தையும் நாட்காட்டியுடன் சேர்த்து ஒதுக்கி வைத்து விட்டு, புதிதாக பிறக்கப் போகும் ஆண்டில் எத்தனை சவால்கள் வந்தாலும் அவற்றை துணிச்சலுடன் எதிர்த்து நின்று வீழ்த்தும் நம்பிக்கையையும், உத்வேகத்தையும் நமக்கு அளிப்பது புத்தாண்டு தான். அதை எவரும் மறுக்க முடியாது.

மனித குலத்தின் இயல்புகளில் ஒன்று வீழ்ச்சியிலிருந்து எழுச்சி அடைவது தான். 2020, 2021 ஆகிய ஆண்டுகள் ஒட்டுமொத்த உலகத்திற்கும் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பது உண்மை தான். ஆனால், அதற்காக நாம் கவலைப்படத் தேவையில்லை. விழுந்தவுடன் எழுந்து இன்னும் வேகமாக ஓடுவது தான் மனிதர்களின் குணம். அது தான் வளர்ச்சியையும், மகிழ்ச்சியையும் அளிக்கும்.  பேரழிவிலிருந்து மீண்டு பெருவளர்ச்சி அடைந்த ஜப்பானும், ஐரோப்பிய நாடுகளும் இதற்கு உதாரணம்.

அதைப்போலவே கடந்த இரு ஆண்டுகளில் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து நாம் மீண்டெழுவோம். 2022-ஆம் ஆண்டில் நாம் அனைத்துத் துறைகளிலும் முன்னேறி வெற்றிக்கொடி ஏற்ற வேண்டும். ஆங்கிலப் புத்தாண்டில் தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து நலன்களும், வளங்களும், ஆனந்தம், வளர்ச்சி, அமைதி, நல்லிணக்கம், சகோதரத்துவம் உள்ளிட்ட அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று கூறி, அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை  புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எம்பி., தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Wish NewYear 2022


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->