அடித்தே கொலை செய்து இருக்கிறார்கள்., இது தான் அதற்க்கு கொடிய உதாரணம் - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வேதனை.! - Seithipunal
Seithipunal


ஓடும் பேருந்தில் அடித்து கொல்லப்பட்ட நடத்துனர் பெருமாள் குடும்பத்துக்கு ரூ. 1கோடி நிதி, அரசு வேலை வழங்க வேண்டும் என்பர், பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 

"சென்னையிலிருந்து விழுப்புரம் சென்ற பேருந்தில் பயணச்சீட்டு எடுக்கும்படி கூறிய நடத்துனர் பெருமாளை போதையில் வந்த பயணி அடித்துக் கொலை செய்திருக்கிறார். கொல்லப்பட்ட நடத்துனரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

குடி குடிப்பவரின் குடும்பத்தை மட்டுமின்றி, மற்றவர்களின் குடும்பத்தையும் கெடுக்கும் என்பதற்கு இது தான் கொடிய உதாரணம் ஆகும். நெடுஞ்சாலைகளில் திறந்து வைக்கப்பட்டுள்ள மதுக்கடைகள் தான் இத்தகைய கொடுமைகளுக்கு காரணம் ஆகும். மதுக்கடைகள் உடனடியாக மூடப்பட வேண்டும்!

கொல்லப்பட்ட நடத்துனர் பெருமாள் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது மறைவால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் அவரது குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிதியுதவியும்,  அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்!

மிகவும் ஆபத்தான பணி செய்யும் ஓட்டுனர், நடத்துனர்களுக்கு இதுவரை தனிநபர் காப்பீடு இல்லை என்பது வருந்தத்தக்கது.  அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுனர்கள், நடத்துனர்கள் அனைவரும் உயிருக்கு ஆபத்தான பணி செய்வதால், அவர்களுக்கு ரூ.50 லட்சத்துக்கு  தனிநபர் காப்பீடு செய்ய வேண்டும்"

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Say About Bus Conductor Perumal Murder Case


கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?
Seithipunal