நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : தேர்தல்னு வந்துட்டா மானம், ஈனம் பார்க்கக்கூடாது- திமுக அமைச்சர்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வருகின்ற பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 19-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. வரும் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ம் தேதி நடை பெறுகிறது.

தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, வேட்பாளர் பட்டியல் தயாரித்தல் உள்ளிட்ட பணிகளில் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த நிலையில் இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ள நிலையில் வாக்கு சேகரிக்கும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதில், காஞ்சிபுரத்தில் திமுக வேட்பாளர்களிடம் தேர்தல் குறித்து பேசிய திமுக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தேர்தல் வந்துவிட்டால் மானம், ஈனம் பார்க்காமல் வேலை செய்ய வேண்டும். வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் எதையும் பிரித்துப் பார்க்காமல் எல்லோரிடமும் ஓட்டு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Don't expect respect in election time minister Anbarasan


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->