பொதுத் தொகுதி கேட்கும் விசிக.!! முரண்டு பிடிக்கும் திமுக.!! முடிவுக்கு வருமா இழுபறி? - Seithipunal
Seithipunal


திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஒரு சில காட்சிகளுடன் தொகுதி பங்கீடு நிறைவு பெற்ற நிலையில் பிரதான கட்சிகளான காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இடையே இழுபறி நீடித்து வருகிறது அதே போன்று கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொகுதி பங்கிட்டு பேச்சு வார்த்தையும் 3வது கட்டத்தை எட்டியுள்ளது.

காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகள் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கேட்கும் தொகுதிகளை திமுக ஒதுக்க மறுப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இத்தகைய சூழலில் திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் இடையிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது. திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நான்கு தொகுதிகளை ஒதுக்க தொடர்ந்து கோரிக்கை வைத்து வரும் நிலையில் இன்று பேச்சு வார்த்தை நடைபெறுகிறது.

திமுக தலைமையிலான கூட்டணியில் ஒரு பகுதி தொகுதி மற்றும் மூன்று தனி தொகுதிகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி கேட்டு வருவதாகவும் சிதம்பரம் தொகுதி மீண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்படுகிறது.

நேற்று செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சிதம்பரம் எனது தொகுதி என்றும் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இன்று மாலை திமுக விசிக இடையே தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் தொகுதி அடையாளம் காணப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக திமுக வட்டாரகள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Vck alliance 2nd round alliance discussion


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->