கரோனா தனிமை வார்டு மாற்றப்பணி.. முக்கிய முடிவெடுத்த ஸ்டாலின்.. ஆணையர் அலுவலகத்திற்கு கடிதம்.!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் கரோனா வைரஸின் தாக்கத்திற்கு 1251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 32 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால் அரசு தரப்பில் தேவையான விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்க்காக மருத்துவமனைகள் அனைத்தும் முன்னேற்பாடுகளாக தயார் செய்யப்பட்டு, படுக்கை வசதிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. போர்க்கால சூழ்நிலையாக கருத்தில் கொண்டு, இரயில்வே நிர்வாகம் சார்பாக இரயில் பெட்டிகளும் தனிமை வார்டுகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. 

சென்னையில் இருக்கும் முக்கிய மருத்துவமனைகளின் தரம் உயர்த்தப்பட்டு இருக்கும் நிலையில், நடிகர் பார்த்தீபன் முன்னதாகவே தனக்கு சொந்தமாக இருக்கும் பிளாட்டுகளை தனிமை வார்டாக பயன்படுத்த அனுமதி அளிக்க தயாராக இருப்பதாக அறிவித்தார். 

இந்த நிலையில், சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கம் உள்ளது. இந்த அரங்கத்தை தனிமைப்படுத்தப்பட்ட வார்டுக்கு பயன்படுத்த அனுமதி வழங்குவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பாக ஸ்டாலினின் கடிதத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தில், திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன், சேகர்பாபு வழங்கியுள்ளனர். அண்ணா அறிவாலயத்தில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை செய்து தேவையான நடவடிக்கை மற்றும் முடிவுகளை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Stalin gives permission for kalangar arangam for corona private ward


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->