தமிழிசை குறித்து அவதூறாக பேசிய திமுக சிவாஜி கிருஷ்ணமூர்த்தி! வழக்கு தொடுக்க இருப்பதாக அறிவித்த குஷ்பு! - Seithipunal
Seithipunal


முன்னாள் தமிழக பாஜக தலைவரும் முன்னாள் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்  குறித்து அவதூராக பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது வழக்கு தொடர இருப்பதாக நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணன்மூர்த்தி என்று சொல்வதை விட திமுகவின் ஆபாச பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்று சொல்லுவதே பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் ஒருமையிலும் ஆபாசமாகவும் மேடைகளில் பேசுவதை வழக்கமாக கொண்டிருப்பவர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி.

இவர் நடிகை குஷ்பு குறித்து ஆபாசமாக பேசி திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். பின் திமுகவில் சேர்க்கப்பட்டார். இருந்த நிலையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மறுபடியும் ஆபாசமான முறையிலும் அருவருக்கதக்க வகையிலும் தமிழிசை குறித்து அவதூறாகபேசி இருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.


இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி நடைபெற்ற தெருமுனைப் பிரச்சார பொதுக்கூட்டத்தில் நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா குறித்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவதூறுவாக பேசிய காணொளி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு நடிகர் ராதிகா கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். பின்னர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது புகார் அளித்தார்.

தற்போது தமிழிசை சௌந்தரராஜன் குறித்து சிவாஜி கிருஷ்ணமூர்த்திஅவதூறுவாக பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் என்ற பேச்சுக்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பாஜக நிர்வாகியுமான நடிகை குஷ்பு மற்றும் ராதிகா ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 இந்த நிலையில் நடிகர் குஷ்பு தனது சமூக வலைதள பக்கமான எக்ஸ் தளத்தில், நாய் வாலை நிமிட முடியாது என்ற ஒரு பழமொழி உண்டு. அதுபோலத்தான் இந்த மனிதனும். மீண்டும் மீண்டும் பெண்களை மிகவும் புண்படுத்தும் வகையில் துஸ்பிரயோகம் செய்து வருகிறார்.

முதல்வர் ஸ்டாலின் திரும்பவும் அவரை கட்சியின் இணைப்பதற்காக மட்டுமே சஸ்பெண்ட் செய்துள்ளார். இடைவேளை நேரத்தில் இந்த வகையான நோய்வாய்ப்பட்ட மனம் கொண்டவர்கள் முதல்வருக்கு தேவையாக இருக்கிறது. தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக இவர் மீது வழக்கு தாக்கல் செய்யப் போகிறேன். பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்று குறித்து கடுமையான பாடத்தை எனக்கு கற்பிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என கூறிவுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Shivaji Krishnamurthy spoke slanderously about Tamilisai


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->