ஜாமின் இருக்கா? இல்லையா? ED-யின் பதிலா கடுப்பான நீதிபதி.!! நாளை விசாரணை.!! - Seithipunal
Seithipunal


சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சென்னை  புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள்ள செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி 3வது முறையாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விசாரணையை சிறிது நேரம் தள்ளி வைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.

இதனால் கடுப்பான நீதிபதி "ஏற்கனவே இந்த வழக்கில் பதிலும் தாக்கல் செய்ய உத்தரவிட்ட இதுவரை தாக்கல் செய்யவில்லை பதில் தாக்கல் செய்ய முடியவில்லை என்றால் எதற்காக வழக்கு தொடுக்கிறீர்கள்?" என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

 அதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த பதில் மனுவில் செந்தில் பாலாஜி மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால் ஜாமீன் வழங்கக் கூடாது எனவும், ஜாமீன் வழங்கினால் விசாரணையை பாதிக்கும் எனவும் அமலாக்கத்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கில் விசாரணை நாளை நடைபெறும் என நீதிபதி அல்லி உத்தரவிட்டு ஒத்திவைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk Senthil Balaji Bail Petition hearing tomorrow


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->