பாஜக நிர்வாகிகள் குறித்து ஆபாச பேச்சு.. பகிரங்க மன்னிப்பு கேட்ட திமுக சைதை சாதிக்.! - Seithipunal
Seithipunal


உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பாஜக நிர்வாகிகளிடம் மன்னிப்பு கோரி சைதை சாதிக் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.

கடந்த அக்டோபர் மாதம் சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் திமுக பேச்சாளர் சைதை சாதி பாஜகவை சேர்ந்த நடிகைகளும் நிர்வாகியுமான குஷ்பூ கௌதமி நமீதா உள்ளவரை ஆபாசமாக பேசினார்.

இதனை அடுத்து அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி சாதிக் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, பெண்கள் பற்றி இனி ஆபாசமாக பேச மாட்டேன் என நடிகைகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அறிவுறுத்தினார். மேலும், இந்த வழக்கு வரும் நவம்பர் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தும், அதுவரை சாதிக்கை கைது செய்ய கூடாது என உத்தரவிட்டுருந்தார்.

இந்த நிலையில் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பாஜக நிர்வாகிகளிடம் மன்னிப்பு கோரி சைதை சாதிக் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி தினமும் ஒரு வாரம் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்து சைதை சாதிக்கிற்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Saidhai sathik apology to BJP female admins


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->