திமுகவில் சர்ச்சையை கிளப்பிய அழகிரி., மதுரையில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


மறைந்த கலைஞர் அர்களின் மகனும் கடந்த காலங்களில் தி.மு.க தென் மண்டல அமைப்புச் செயலாளராக விளங்கியவர் மு.க.அழகிரி. மத்திய அமைச்சராக பதவி வகித்த இவர், 2014 ஆம் ஆண்டு கட்சியிலிருந்து திடீரென நீக்கப்பட்டார். 

அதற்கு பிறகு தி.மு.கவை விமர்சித்து மு.க.அழகிரி அவ்வப்போது கருத்துக்களை தெரிவித்து வந்தார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் தி.மு.க.வுக்கு எதிராக செயல்பட்டனர். 

திமுகவில் தொடர்ந்து புறக்கணிக்ககப்படுவதால் மு.க.அழகிரி முக்கிய முடிவுகள் எடுப்பார் என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்த நிலையில், ஆனால் இது தொடர்பாக அவர் எந்த வித கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்தார். 

இதனிடையே, அழகிரி மீண்டும் தி.மு.க.வில் சேர்க்கப்படுவார் பரவலாக பேசப்பட்டது. ஆனால் இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் இல்லை. 

இந்த நிலையில், மதுரையில் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் தி.மு.க.வை விமர்சித்து மீண்டும் சுவரொட்டி ஒட்டியது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரையில் உள்ள பல்வேறு வீதிகளிலும் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், "அண்ணே... அண்ணே... அழகிரி அண்ணே... நம்ம கட்சி நல்ல கட்சி. மதுரையில இப்ப ரொம்ப கெட்டுப் போச்சுன்னே...'' என அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த சுவரொட்டி விவகாரம் தி.மு.க. வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk posters in madurai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->