திமுகவின் புதிய பொருளாளர்.. முக்கிய நிர்வாகிக்கு அடித்த அதிர்ஷ்டம்.!! - Seithipunal
Seithipunal


திமுக பொதுச்செயலாளராக இருந்த பேராசிரியர் க அன்பழகன் கடந்த 7ஆம் தேதி மறைந்ததையடுத்து புதிய பொதுச் செயலாளர் தேர்வு செய்வதற்கான பணியை திமுக தொடங்கியுள்ளது. 

திமுக பொதுச்செயலாளர் தேர்வு செய்வதற்காக திமுக பொதுக் குழுக் கூட்டமானது வருகின்ற 29ம் தேதி நடைபெறும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.

இன்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 15.3.2020 அறிக்கையின் வாயிலாக, திமுக பொதுக்குழு கூட்டத்தில் 29.3.2020 கிழமை காலை 10 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் பொதுச் செயலாளர் பொறுப்புக்கான தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

16.3.2020 கடிதத்தின் வாயிலாக கழகப் பொருளாளர் துரைமுருகன் பொதுச் செயலாளர் பொறுப்புற்கு போட்டியிட விரும்புவதாகவும், எனவே அவர் தனது பொருளாளர் பதவியில் இருந்து விலகுவதாக என்னிடம் தெரிவித்தால், அதை ஏற்றுக்கொள்கிறேன். எனவே 29.3.2020 ஆண்டு நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் கழகத்தின் பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் உறுப்புகளுக்கான தேர்வு நடைபெறும் என தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அறிவாலயத்தில் நடைபெற்ற விவாதங்களில் பிறகு புதிய பொருளாளராக டி.ஆர். பாலுவை டிக் செய்துள்ளாராம் மு.க.ஸ்டாலின். பொருளாளர் பதவிக்கு போட்டிபோடும் மற்றவர்களுக்கு முக்கியத்துவம் தரும் பதவி தருவதாகக் கூறி சமாதானப்படுத்தினார் சமாதானப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. அதன்மூலம் திமுகவின் புதிய பொதுச் செயலாளராக துரைமுருகனும், புதிய பொருளாளராக டி.ஆர். பாலு பதிவிறக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk next treasurer for tr balu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->