திமுக பொதுச்செயலாளர் மாற்றம்? க.அன்பழகனுக்கு பிறகு பதவியில்அமரப்போகும் முக்கிய தலைவர்!  - Seithipunal
Seithipunal


நவம்பர் 10 ஆம் தேதி(நாளை) காலை 10 மணி அளவில் சென்னை ராயப்பேட்டையிலுள்ள ஒய்எம்சிஏ திடலில்   திமுக பொதுக்குழு கூட்டம்  நடைபெற உள்ளதாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் நேற்று அறிவித்தார். இந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் அடுத்து நடவுள்ள பணிகள், சட்ட திருத்தம், தணிக்கை குழுவின் அறிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமயில் நடக்கும் இந்த பொதுக்குழு கூட்டத்தில், கழகத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் நிச்சயம் பங்கேற்க வேண்டும் என திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார். 

இந்தநிலையில், திமுக பொது செயலாளர் க.அன்பழகன் 94 வயதுக்கு மேல் ஆகிறது, அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சமீப காலமாக முன்பு போல கட்சி பணிகளில் செயல்பட முடியாத சூழ்நிலை உள்ளார். இதனால் அவரது பொறுப்புகளை கவனிக்க திமுகவில் இருக்கும் மூத்த தலைவரக்ளில் ஒருவருக்கு அவரது பொறுப்புகளை கவனிக்க வாய்ப்பு கொடுக்கப்படலாம் என தெரிகிறது. 

அந்தவகையில், திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான துரைமுருகன் இணைப் பொது செயலாளர் பதவி வழங்க்கப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின.

இதனை திமுக பொதுக்குழுவில் வருகிற நவம்பர் 10 ஆம் தேதி(நாளை) அறிவிக்கப்படலாம் என அறிவாலய வட்டாரத்தில் பேசப்படுகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk next general secretary may change


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->