ஒரு எம்எல்ஏ-வை இழக்கப்போகும் திமுக.? அதிர்ச்சியில் ஸ்டாலின்.!! - Seithipunal
Seithipunal


முன்னாள் அதிமுக அமைச்சரும், தற்போதைய திமுகவின் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்பாலாஜியின் வீட்டிற்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சீல் வைத்தனர். டிஎஸ்பி தலைமையில் 15 பேர் கொண்ட போலீசார், செந்தில் பாலாஜியின் வீடு, அவரது சகோதரர் வீடு, சென்னையில் உள்ள வீடு உள்ளிட்ட இடங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

2011-2015 ஆம் ஆண்டில் போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்த போது போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித்தருவதாக 16 பேரிடம் சுமார் 95 லட்சம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. 

இதையடுத்து, அம்பத்தூர் கணேஷ்குமார் என்பவர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அந்த  புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த சோதனையை அடுத்து செந்தில்பாலாஜியின் வீட்டிற்கு போலீசார் சீல் வைத்தனர். 

அந்த வீட்டில் சோதனையிட போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். நோட்டீசுக்கு தடை கோரி நீதிபதி ஆதிகேசவலு முன் செந்தில் பாலாஜி தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. ஆனால் நோட்டீசுக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதி உத்தரவிட்டார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk mla senthil balaji case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->