டெல்லியில் அந்தர் பல்டி அடித்த திமுக எம்.எல்.ஏ செல்வம்!  பேரதிர்ச்சியில் பாஜக!  - Seithipunal
Seithipunal


சென்னை ஆயிரம் விளக்கு திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியது. திமுகவின் தலைமை நிலைய செயலாளராக இருக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  கு.க.செல்வம், 1997ல் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சென்னை மேற்குமாவட்ட செயலாளர் ஆக இருந்த அன்பழகன் மறைவிற்கு பிறகு, தி.மு.க. மாவட்ட செயலாளர் பதவி  கு.க.செல்வம் க்கு வரும் என எதிர்பார்த்த வேளையில், உதயநிதியின் ஆதரவு பெற்ற சிற்றரசுக்கு கொடுக்கப்பட்டது. 

ஆனால் மாவட்ட செயலாளர் பதவி கிடைக்காததால், கு.க.செல்வம் டெல்லியில் இன்று மாலை பாஜக தலைவர் நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியது.

டெல்லியில் அகில இந்திய பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்த பின் கு.க.செல்வம் பேட்டி அளித்தார். அப்போது, பாஜகவில் இணையப்போவதாக வெளியான தகவலுக்கு திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம் மறுப்பு தெரிவித்துள்ளார். தொகுதி மேம்பாட்டுக்காக மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை சந்திக்க வந்ததாக விளக்கம் அளித்துள்ளார். இது பாஜகவினருக்கு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது. தமிழ் கடவுள் முருகனை தவறாக பேசியவர்களை மு.க.ஸ்டாலின் கண்டிக்க வேண்டும்  எனவும் பேசியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MLA Selvam press meet


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->