அமெரிக்காவில் அண்ணாமலை ஓட்டிய படத்தை விமர்சனம் செய்த செந்தில் பாலாஜி! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் உள்ள பூத் எண்ணிக்கை கூட இவருக்குத் தெரியாது!

இன்டர்நேஷனல் லீடர் பெல்லோஷிப் என்ற பயிற்சி வகுப்பில் பங்கேற்பதற்காக அண்ணாமலை கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி அமெரிக்காவின் கலிபோர்னியாவிற்கு சென்றார். பயிற்சி முடிந்த பிறகு பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அண்ணாமலை பங்கேற்று வருகிறார். அப்போது ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது பல்வேறு அரசியல் கட்சிகளை விமர்சனம் செய்திருந்தார் கட்சி தலைவர்களையும் விமர்சனம் செய்திருந்தார். மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசனை விமர்சனம் செய்ததற்கு கட்சியின் நிர்வாகிகள் அறிக்கை மூலம், வீடியோ மூலம் பதிலடி கொடுத்து வருகின்றனர். திமுகவின் அமைச்சர்களும் எம்பிக்களும் தன் பங்கிற்கு அண்ணாமலையை விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் அமெரிக்காவில் கூட்டம் ஒன்றில் பேசிய அண்ணாமலை இந்தியாவில் மொத்தம் 900 மாவட்டங்கள் இருக்கிறது என குறிப்பிட்டு பேசியிருந்தார். அந்த கருத்தை விமர்சிக்கும் வகையில் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் , "களமும் தெரியாது; தரவும் தெரியாது"  என அண்ணாமலையை விமர்சனம் செய்துள்ளார். அந்தத் ட்விட்டில் செந்தில் பாலாஜி கூறியதாவது "தமிழ்நாட்டில் உள்ள பூத் எண்ணிக்கை கூட பாஜக மாநில தலைவருக்குத் தெரியாது! 68,019 வாக்குச்சாவடிகள் உள்ள நிலையில் 66,000தான் உள்ளன என்பார். களமும் தெரியாது; தரவும் தெரியாது. சமூக ஊடகத்தில் 'படம்' ஓட்டி விளம்பரம் செய்து கொண்டிருப்பவருக்கு தேர்தலில் தமிழ்நாடு பாடம் கற்பிக்கும்!" என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சனம் செய்துள்ளார்.

அண்ணாமலை செய்தியாளர்களை சந்திக்கும் பொழுது கையில் பேப்பரை வைத்துக்கொண்டு தரவுகளுடன் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்து வந்த நிலையில் அமெரிக்கா சென்று அவர் ஓட்டிய படத்தை புள்ளி விவரங்களுடன் திமுகவைச் சேர்ந்த அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் விமர்சித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk minister Senthil Balaji reviewed Annamalai statement


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->