#BREAKING | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக அமைச்சர்.! சற்றுமுன் வெளியான மருத்துவ அறிக்கை.! - Seithipunal
Seithipunal


தமிழக வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்திக்கு கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு இருப்பது இன்று காலை உறுதியாகியது. 

இதனையடுத்து அவர் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்நிலையில், சற்றுமுன் மருத்துவமனை நிர்வாகம் அவரின் உடல்நிலை குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், "வணிக வரிகள் மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, கோவிட் தொற்றுக்கான லேசான அறிகுறிகளுடன் 20.01.2022 (வியாழக்கிழமை) மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.  

அவருக்கு RTPCR கோவிட் பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.  இருப்பினும், அவரது இரத்த பரிசோதனைகள் சாதாரண வரம்புகளுக்குள் உள்ளன. மேலும் அவர் இப்போது மருத்துவ ரீதியாக  நலமுடன் உள்ளார்.

அமைச்சரின் உடல்நிலையை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மருத்துவக் குழு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தன்னை வீட்டிலேயே தனிமை படுத்திகொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Minister Affected Covid19


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->