மணல் கடத்திய திமுக ஒன்றியக் குழுத் தலைவர்! இன்ஸ்பெக்டருக்கும் சேர்த்து வைக்கப்பட்ட ஆப்பு!  - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் அருகே திமுக ஒன்றியக் குழுத் தலைவர் மணல் கொள்ளையில் ஈடுபட்டும், அவரை கைது செய்யாத திருக்கோஷ்டியூர் காவல் ஆய்வாளரை ஜெயமணி பணியிடை நீக்கம் செய்து ராமநாதபுரம் சரக டிஐஜி மயில்வாகணன் உத்தரவிட்டார்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே கோட்டையிருப்பைச் சேர்ந்தவர் சண்முகவடிவேல். திருப்பத்தூரில் திமுகவின் ஒன்றியக் குழுத் தலைவராக இவர் இருந்து வருகிறார். மேலும், இவர் தொடர்ந்து மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதை வாடிக்கையாகவும் வைத்துவந்துள்ளார்.

அப்படி இவர் கொள்ளை அடிக்கும் மணலை கண்டரமாணிக்கம் சாலையில் உள்ள தனியார் தோட்டத்தில் பதுக்கி வைத்து இருக்கிறார். கடந்த வாரம், அந்தத் தோட்டத்தை ஆய்வு செய்த வட்டாட்சியர் ஜெயலட்சுமி அதிர்ந்து பொய் இருக்கிறார்.

அந்த தோட்டத்தில் 50 லோடு மணல், 150 லோடு சவடு மண் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததைக் கண்டறிந்து தோட்டத்துக்கு 'சீல்' வைத்ததோடு, திருக்கோஷ்டியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் வட்டாட்சியர் ஜெயலட்சுமி.

இந்த மணல் கொள்ளை குறித்து வழக்குப் பதிவு செய்த இன்ஸ்பெக்டர் ஜெயமணி, மணல் கொள்ளையில் ஈடுபட்ட சண்முகவடிவேலுவை கைது செய்யாமல் காலதாமதம் செய்து வந்துள்ளார். இதனை அடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ரோஹித்நாதன் பரிந்துரையின் பேரில், இன்ஸ்பெக்டர் ஜெயமணியைப் பணியிடை நீக்கம் செய்து ராமநாதபுரம் சரக டிஐஜி மயில்வாகணன் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk member sand robbery case issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->