சற்றுமுன் திமுகவின் முக்கியத் தலைவர் திடீர் ராஜினாமா.! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 37 இடங்களை கைப்பற்றியுள்ளது. மேலும் நாடாளுமன்ற தேர்தலுடன் 22 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக 13 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தத் தேர்தலில் திமுக வெற்றிக்காக திமுக தலைவர் ஸ்டாலின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தீவிர பிரச்சாரம் செய்து வந்தார். இதைத் தொடர்ந்து தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுகவின் முக்கிய பொறுப்பு உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்படும் என திமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசி வந்தனர். இருப்பினும் அவருக்கு எந்த பதவியும் இதுவரை வழங்கப்படவில்லை. 

இது குறித்து உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், நான் பதவிக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட வில்லை, திமுகவின் தீவிர தொண்டனாக தெரிவித்தார். 

இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் பதவியிலிருந்து வெள்ளக்கோவில் சாமிநாதன் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து திமுக தலைமைக்கு இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். இந்த பொறுப்பை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்க பட வாய்ப்பு உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk member resign the post


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->