திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள்.!! முழு லிஸ்ட் இதோ.!! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இன்று வெளியிட்டார். 

இதனைத் தொடர்ந்து திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களை மு.க ஸ்டாலின் தேர்தல் வெளியீட்டு விழா மேடையில் அறிவித்தார்.

அதன்படி,

1) மாநிலங்கள் சுயாட்சிப் பெரும் வகையில் இந்திய அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும்.

2) ஆளுநர் பதவி தேவையில்லை என்றாலும் அந்த பதவி இருக்கும் வரை மாநில முதலமைச்சர்களின் ஆலோசனை பெற்று ஆளுநர் நியமிக்க வேண்டும்.

3) ஆளுநருக்கு அதிகாரம் வழங்கும் பிரிவு 361 நீக்கப்படும்.

4) உச்ச நீதிமன்றத்தின் கிளை சென்னையில் அமைக்கப்படும்.

5) புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்.

6) மத்திய அரசு பணிகளுக்கு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மாநில மொழிகளில் நடத்தப்படும்.

7) மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் அலுவல் மொழியாக பயன்படுத்தப்படும்.

8) அனைத்து மாநில மொழி வளர்ச்சிகளுக்கும் சம அளவு நிதி வழங்கப்படும். 

9) திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்.

10)  தாயகம் திரும்பிய இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும். 

11) ரயில்வே துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். 

12) புதிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும். 

13) நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்தப்படும்.

14) நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி உணவு திட்டம் அமல்படுத்தப்படும். 

15) இந்தியா முழுவதும் உள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் தோறும் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும்.

16) தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

 

17) மாநில முதலமைச்சர்களை கொண்ட மாநில வளர்ச்சி குழு அமைக்கப்படும்.

18) மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 10 லட்சம் ரூபாய் வட்டியுள்ள கடன் வழங்கப்படும்.

19) தொழிலாளர் விரோத சட்டங்கள் மறு சீரமைக்கப்படும்.

20) தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்.

21) வங்கி கணக்குகளில் குறைந்தபட்ச தொகை இல்லாத போது விதிக்கப்படும் அபராத தொகை நீக்கப்படும்.

22) குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 முழுமையாக ரத்து செய்யப்படும். 

23) மத்திய அளவில் சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தப்படும். 

24) ஜிஎஸ்டி சட்டத்தில் திருத்தம் கொண்டவரப்படும்.

25) தொகுதி மறுவரையறை சீரமைப்பில் தமிழ்நாட்டின் முக்கியத்துவம் குறையாமல் பாதுகாக்கப்படும். 

26) வேளாண் விளைப் பொருட்களுக்கு மொத்த உற்பத்தி செலவு கூடுதலாக 50 விழுக்காடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK loksabha election manifesto


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->